கவிதைகள்

காதல் பிச்சை

உன் அத்தை(?) கடவுளை வணங்கச் சொன்னால்,
நான் வழக்கமாகச் சொல்வது….
“அந்த ஆளிடம் என்னால் பிச்சை கேட்க முடியாது!”
ஆனால் இந்த காதல், என்னை கூட
எடுக்க வைத்தது உன்னிடம் – “பிச்சை”!


காதல் பிசாசு

நம் காதல் இறந்தவுடன்
உன் இடத்தை நிரப்ப இன்னொருவளை
வலை வீசி தேடிக்கொண்டிருக்கிறது
இந்த காதல் பிசாசு.

பாவம். அதற்கு தெரியாது, நீ
இருந்த இடத்தில் நம் காதலுக்கு
நான் கல்லறை எழுப்பியது.

கல்லறை உடைத்து மணமேடை செய்ய
அதனால் முடியாது என நினைக்கிறேன்.
பொறுத்திருந்து பார்ப்போம்.


வேலை

எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையாம்

ஊர் சொல்கிறது.

பாவம். அவர்களுக்கு தெரியாது, நான்

24 மணி நேரமும் உன்னை காதலித்துக் கொண்டிருப்பது.


காதல் தோல்வி

“தோல்விதான் வெற்றிக்கு முதல் படி”

சொன்னது காதல் தோல்வி பற்றி தெரியாத

யாரோ ஒரு அப்பாவி!


முட்களே எனக்குப் பிடிக்கும்!

ரோஜாவின் இதழ்களை விட
முட்களே எனக்குப் பிடிக்கும்.
நீ கொடுத்த ரோஜாவின் இதழ்கள்
உதிர்ந்து விட்டன. ஆனால்,
முட்கள் கிழித்த அப்படியே என் கையில்.
கவலைபடாதே! காயம் ஆற நான் விட மாட்டேன்.


Copyright © 1996-2010 Arun the ACE - தமிழ் பக்கம். All rights reserved.
iDream theme by Templates Next | Powered by WordPress