காதல் பிச்சை

உன் அத்தை(?) கடவுளை வணங்கச் சொன்னால்,
நான் வழக்கமாகச் சொல்வது….
“அந்த ஆளிடம் என்னால் பிச்சை கேட்க முடியாது!”
ஆனால் இந்த காதல், என்னை கூட
எடுக்க வைத்தது உன்னிடம் – “பிச்சை”!


காதல் பிசாசு

நம் காதல் இறந்தவுடன்
உன் இடத்தை நிரப்ப இன்னொருவளை
வலை வீசி தேடிக்கொண்டிருக்கிறது
இந்த காதல் பிசாசு.

பாவம். அதற்கு தெரியாது, நீ
இருந்த இடத்தில் நம் காதலுக்கு
நான் கல்லறை எழுப்பியது.

கல்லறை உடைத்து மணமேடை செய்ய
அதனால் முடியாது என நினைக்கிறேன்.
பொறுத்திருந்து பார்ப்போம்.


வேலை

எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையாம்

ஊர் சொல்கிறது.

பாவம். அவர்களுக்கு தெரியாது, நான்

24 மணி நேரமும் உன்னை காதலித்துக் கொண்டிருப்பது.


காதல் தோல்வி

“தோல்விதான் வெற்றிக்கு முதல் படி”

சொன்னது காதல் தோல்வி பற்றி தெரியாத

யாரோ ஒரு அப்பாவி!


இனிது இனிது எனது தமிழ் மொழி இனிது – இலங்கை தமிழ்

வழக்கம் போல் வலையை மேய்ந்து கொண்டிருந்தேன்….. தற்செயலாக ஹேமாவின் இடுக்கையில் தரையிறங்கினேன். இலங்கை தமிழ்….. அருமை.  “நானறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” – உண்மை. ஹேமாவின் சமீபத்திய இடுக்கை உங்களுக்காக….

ஒரு குழப்படிப் பெடியனின்ர அப்பா ஒருத்தர் இருந்தார்.நல்ல அப்பாதான்.கேக்கிறதெலலம் வாங்கிக் குடுப்பார்.சட் புட் எண்டு….நல்லாக் கோவம் வரும் அவருக்கு.எல்லாத்துக்கும் டமார் டுமீல்… எண்டு அடிதான்.கையில கால்ல அடிபட்டு அழுதுகொண்டு வந்தாலும்”ஏண்டா பாத்துக் கீத்து நடக்கிறேல்லையே”எண்டு அதுக்கும் அடிதான்.அதுக்குப்பிறகுதான் மருந்து டொக்டர் எல்லாம்.

இப்பிடி இருக்கேக்க ஒரு நாள் அந்தப் பெடியனுக்கு நல்லாக் கடுமையாக் காய்ச்சல் வந்திட்டுது.பார்த்தா…பெடியனின்ர மேல் தொடையில பெரிய புண் ஒன்று.பெடியனைச் சோதிச்ச டொக்டர் “நாய் கடிச்சதோ தம்பிக்கு”எண்டு கேக்க…..”இல்லை”எண்டு சொன்னான்.திரும்பத் திரும்ப அவர் அவனைக் கேக்க அவம்”ஓம்….ஒரு நாள் பள்ளிக்கூடத்தால வரேக்க நாய் கடிச்சிட்டுது “எண்டு உண்மை சொல்லிட்டான்.

“ஏன் வீட்ல சொல்லேல்ல நீ”எண்டு கேட்டதுக்கு “ஐயோ…நான் சொல்லேல்ல.இப்பவும் நீங்க சொல்லாதேங்கோ டாக்டர்.இப்பகூட அப்பா அடிப்பார்”எண்டான் அழுதுகொண்டே.

இதை டாக்டர் சொல்லி அறிந்த அப்பா “கடவுளே என்ர பிள்ளையைக் காப்பாத்துங்கோ”எண்டு குழறி அழுதிட்டார் அந்த அப்பா.

ஆனால் டாக்டரோ….”நாய் கடிச்ச அண்டைக்கே ஊசி போட்டிருக்கவேணும்.இப்ப ஒண்டுமே செய்ய ஏலாது பாருங்கோ”எண்டு கையை விரிச்சிட்டார்.

பெடியனைத் தூக்கிக்கொண்டு கனக்க கனக்க டொக்டரைத் தேடிக் காசையும் செலவழிச்சுக் கொண்டு திரிஞ்சார் அந்த அப்பா.ஆனால் அந்தப் பெடியன் தப்பேல்ல.செத்துப்போனான்.

இங்க நான் சொல்ல வாறதென்னெண்டா அப்பாக்களே அம்மாக்களே கோபப்படுங்கோ.உங்கட பிள்ளைகள்.உங்களுக்கு உரிமை இருக்கு.ஆனால்..பாருங்கோ அளவோட.பிள்ளைகளோட அன்பாயிருங்கோ.பிள்ளைகளோட கனக்கக் கோபப்படாதேங்கோ.சிநேகமாயிருங்கோ.எப்பவும் கைக்குள்ள அணைச்சு வச்சிருங்கோ.பிள்ளைகள் உங்களிட்ட ஒண்டும் ஒளிக்கமாட்டினம்.
சின்ன விஷயம்தான்.அப்பாக்களே அம்மாக்களே….யோசிச்சு நடவுங்கோ.

ஹேமாவின் தளம் – சந்தியில் நாம்.


கல்லறை எல்லாம் old

மலர் தூவியும் இறங்காத அவள்,
இன்று கண்ணீருடன் மலர் தூவுகிறாள்…..
.
.
.
.
.
.
.
.
.
.
.
என் திருமணத்தில்…. (கல்லறை எல்லாம் old)
நமக்கு 1000 figure மடியும்……


ஒரு பொண்ணு… நல்ல அழகான பொண்ணு…

ஒரு பொண்ணு… நல்ல அழகான பொண்ணு… சொந்தக்காரப் பொண்ணுதான். நான் பார்த்ததே இல்லை (Photo பார்த்திருக்கேன்) but ரொம்ப நிறைய கேள்விப்பட்டுகிட்டே இருக்கிறேன்.  சரி, ரொம்ப நல்ல பொண்ணா இருக்கே கொஞ்சம் friendlyயா (சத்தியமா friendlyயா தான்) try பண்ணலாமேன்னு அங்க இங்க கெஞ்சி கூத்தாடி phone numberஅ கரெக்ட் பண்ணி SMS அனுப்பினா, அண்ணான்னு reply அனுப்புறா… “I’m not your Bro.. Let’s be friends!” அப்டின்னு சொன்னா மதிக்கவே மாட்டேங்கறா…

அதனால உங்க collegeலதான் என் friend படிச்சாங்க… ரொம்ப நாளா contact இல்லை… Please help me… அப்டின்னு ஒரு பிட்ட போட்டேன். கொஞ்சம் பேசுனாங்க… but finally its all vain! ஒன்னும் முடியல…. நல்லாவே distance maintain பண்றாங்க. Distance maintain பண்ண, maintain பண்ண அவங்க மேல நான் வச்சிருக்கிற impression ஜாஸ்தி ஆகீட்டே போகுது. ஏன்னே தெரியல அந்தப் பொண்ணப் பத்தின information எல்லாம் நான் collect பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

Here is a gist of what I’ve collected so far:

அந்தப் பொண்ணோட School, College எல்லாம் வேண்டாம்னு நினைக்கிறேன்.

அவளுக்கு தயிர் சாதம், உருளை கிழங்குன்னா ரொம்ப பிடிக்கும்.
அவள் ஒரு Scooty Pep வச்சிருக்கிறா.
Fishனா பிடிக்கும் (சாப்பிட இல்ல… Aquariamல பார்க்க)
சாக்லேட்னா ரொம்ப பிடிக்கும். (esp Dairy Milk)
Vijay Tvல வர்ர almost எல்லா famous programமும் பார்ப்பா.
மழைன்னா ரொம்ப பிடிக்கும். நிலா வெளிச்சம் பிடிக்கும்.
Surya, Jo ன்னா பிடிக்கும். Almost எல்லா நடிகையையும் பிடிக்கும்.
Vijayன்னா (esp கில்லி) பிடிக்கும். (வர வர எனக்கும் பிடிக்குது. எல்லாம் என் தலை எழுத்து…..)
Tom & Jerry பிடிக்கும்.
அவளோட அம்மா, அப்பா, தங்கச்சிய பிடிக்கும்.
Eye Donate பண்ணியிருக்கா (Social Responsibility… I really like her)
குழந்தைங்கன்னா ரொம்ப… ரொம்ப… பிடிக்கும்.
Got too much helping tendency….
சாய் பாபாவ (the old guy..not the new crook) பிடிக்கும்.
கருப்புதான் அவளுக்கு பிடிச்ச கலர். (எனக்கும்தான்…)
இளநீர்னா பிடிக்கும்.
பிடித்த பாடல்கள்: முன்பே வா, Hosanna…

Highlightடான மேட்டர் என்னன்னா… அவள் சிரிச்சா கன்னத்தில் குழி விழும்.

இப்ப என்னோட doubt என்னன்னா…

அவ என்னை பத்தி என்ன நினைச்சிட்டிருக்கா? இந்த SMS எல்லாம் அனுப்பினதால ஒரு வேளை தப்பா நினைச்சிட்டிருக்காளா?
How to proceed with her now?
அவள நான் பார்த்ததே இல்ல… அப்புறம் ஏன் இவ்ளோ Seriousஆ அவள் பின்னாடி போறேன்?

ஒன்னுமே புரியல… ஒரே confusion….
Please shoot your suggestions!


Basically நான் ஒரு சோம்பேறி!

மக்களே, நான் இந்த blog ஆரம்பிச்சப்போ வாரம் ஒரு தடவையாவது எழுதனும் என்று நினைத்தேன். But, இது வரைக்கும் மொத்தமாவே ஒரு தடவைதான் எழுதியிருக்கேன். இதுக்கு காரணம் “தமிழ்ல type பண்றதுதான்” அப்டின்னு நான் சொன்னா நீங்க என்ன நம்பவா போறீங்க? தமிழ்ல type பண்றது நிஜமாவே ரொம்ப கஷ்டங்க. But, அதையெல்லாம் விட “Basically நான் ஒரு சோம்பேறி” அப்டிங்கறது தான் உண்மை.

காலேஜ் படிக்கறப்போ சில பேர் (esp. நம்ம குண்டு கோபால்) எல்லா வேலையும் ஒழுங்கா செய்வாங்க, ஆனா குளிக்க மட்டும் மாட்டாங்க. வாரம் ஒரு தடவை, இல்லைன்னா 10 நாளைக்கு ஒரு தடவைதான் குளிப்பாங்க. கேட்டா, “அது வேற ஒரு extra வேலை மச்சான்”னு சொல்லுவாங்க. இன்னும் சில பேர் 9 மணி காலேஜுக்கு, எட்டே முக்காலுக்கு தான் எழுந்திருப்பாங்க. ஆனா குளிச்சு, சாப்பிட்டு நமக்கு முன்னாடி கிளாஸ்ல உட்காந்திருப்பாங்க. நான் என்ன சொல்ல வர்ரேன்னா, ஊர்ல இருக்கிற எல்லாரும் எதாவது ஒரு விஷயத்துல சோம்பேறிதாங்க.

“Often the smartest people are the laziest ones” – சோம்பேறிங்கதான் புத்திசாலிங்கன்னு சொல்றாங்க. ஒரு புத்திசாலி சோம்பேறியாவே இருக்கனும்னு நினைச்சுட்டா அவன் உலகத்துக்கு எதாவது தரப்போறான்னு அர்த்தம். மிக்ஸி, கிரைண்டர்ல ஆரம்பிச்சு கார், கம்ப்யுட்டர் வரைக்கும் எல்லாத்துக்கு பின்னாடியும் ஒரு சோம்பேறி இருக்கிறாங்க. சோம்பேறிதனத்த இந்த angleல பார்த்தா அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.

எல்லாத்திலேயும் ஒரு அளவோட இருந்தா பிரச்சனையே இல்லை. ஆனா சில பேர் வரம்பு மீறி போவாங்க. அவங்களையெல்லாம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. சோம்பேறிதனத்த காலி பண்றதுக்கு ஒரு நல்ல வழி : ஒரு விஷயத்த செய்யனும்னா செஞ்சிருங்க. “செய்யனுமா” அப்டின்னு ஒரு ‘?’ போட்டா சோலி முடிஞ்சி போச்சு. படிக்கனும்னா படிச்சிருங்க, எழுதனும்னா எழுதிருங்க. Take Action – இது தான் சோம்பேறிதனத்த விரட்டுறதுக்கு ஒரே வழி.

“இத நீங்க செய்றது” அப்டின்னு யாரோ கேக்கறது என் காதுல விழுது. நானே யாரோ என்கிட்ட சொன்னத உங்ககிட ஒட்டிக்கிடு இருக்கேன். வந்தோமா, படிச்சோமா அப்டியே நாலு பேருக்கு இத advice பண்ணோமான்னு போவிங்களா, அத விட்டிட்டு கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு……..

நான் அப்பவே சொல்லல, “ஊர்ல இருக்கிற எல்லாரும் எதாவது ஒரு விஷயத்துல சோம்பேறிதாங்கதான்”னு.. கீழ இருக்கற படம் அதுக்கு ஒரு sample..


கடவுள் உண்டா? இல்லையா?

சின்ன வயதில் என் தாத்தாவிடம் ராமாயணம், மகாபாரதம் போன்ற பல கதைகள் கேட்டிருக்கிறேன். குறிப்பாக கிருஷ்ணர் கதைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை மட்டும் அடிக்கடி கேட்பேன். அதன் பிறகு பள்ளி – விவேகானந்தா வித்யாலயா. கடவுள் பத்தி ரொம்ப பேசுவாங்க. எனக்கு இந்தியா மேலும், கடவுள் மேலும் ஒரு ஈர்ப்பு வர அந்த பள்ளிதான் காரணம்.

அப்ப எல்லாம் கடவுள் எனக்கு ஒரு நெருங்கிய நண்பன். என்ன தப்பு செஞ்சாலும் ஒரு சாரி சொன்னா போதும். அவன் என்னிடம் மட்டும் கோவிக்க மாட்டான். அதனாலோ என்னவோ நான் நிறைய தப்பு செஞ்சிருக்கேன். பொய் சொல்றது, திருடுறது, ஸ்கூலுக்கு கட் அடிக்கறது etc etc… நிறைய சொல்லலாம். எல்லாரும் செய்றதுதான். நீங்க மட்டும் யோக்கிய்மா? கொஞ்சம் flashbackஅ யோசிச்சு பாருங்க. சரி matterக்கு வர்றேன்… எங்க விட்டேன்..ஆங்..கடவுள். நான் என்ன தப்பு செஞ்சாலும் கடவுள் எனக்கு ஒரு Partner. எதிலேயும் பங்கு கேட்காத Partner. என்னமோ தெரியல, நான் அவர்கிட்ட மட்டும் அவ்வளவா பயந்தது இல்ல. இப்படி கடவுளுக்கும், எனக்கும் ஒரு நல்ல relationship இருந்தப்போ நான் சின்னதா ஸ்கூல் படித்து முடித்து விட்டேன்.

question_exclamation

அடுத்தது காலேஜ். ஹாஸ்டல் வாழ்க்கை. வீட்டை விட்டு முதன் முதலா வெளிய போனேன். புது இடம். புது நண்பர்கள். சொந்தமா யோசிக்க ஆரம்பிச்ச வயசு. கடவுள கிட்டத்தட்ட மறந்தே போனேன். ஒரு செமஸ்டரே முடிஞ்சு போச்சு. ரிசல்ட்டுக்காக வெய்ட்டிங். எத்தனை பேப்பர்ல போகும்னே தெரியல. கடவுள்கிட்ட எப்படியாவது பேப்பர் எல்லாம் கிளியர் பண்ண வச்சுடுப்பான்னு ஒரு அப்ளிகேசன் போடலாமான்னு ஒரு யோசனை…. ஆனா நான்தான் அப்ப யோசிக்க ஆரம்பிசுட்டேனே. அப்புறம் எங்க கடவுள். மூனு பேப்பர்ல அவுட். அது எனக்கு ஒன்னும் பெருசா தோணலை(படிக்கறது என் அம்மாவா இருந்தா, I’m sorry…. அது ரொம்ப பழைய கதை…முடிஞ்சு போச்சு. feel பண்ணி எனக்கு phone பண்ணாதீங்க ;) ) அப்ப கடவுள் உண்டா இல்லையான்னு எனக்கு ஒரே confusion! உண்டுன்னு ஒத்துக்கவும் முடியல. இல்லைன்னு ஒதுக்கவும் முடியல. கடவுள் சின்ன வயசுல இருந்து என் மனசுல ஆழமா பதிஞ்சுட்டார். ஸ்௬ல்ல எப்பவோ படிச்ச வாக்கியம் – “பசுமரத்து ஆணிபோல”… அந்த மாதிரி என் மனசுல ஆழமா பதிஞ்சுட்ட கடவுள என்னால ஒத்துக்கவும் முடியல, ஒதுக்கவும் முடியல. கடைசியா ஒரு முடிவுக்கு வந்தேன். கடவுள் இருக்கார். ஆனா அவர் கிட்ட எதுவும் கேட்க ௬டாது. அவர்கிட்ட கேட்கறதும், குறை சொல்லறதும் எனக்கு பிச்சை கேட்கற மாதிரி இருந்தது. “ஏற்பது இகழ்ச்சி!” – நினைவுக்கு வந்தது. கடவுளுக்கும் எனக்கும் இடைவெளி ௬டியது. கடவுளின் பெயரால் மதமாற்றம், வன்முறை, தீவிரவாதம்….. காண சகிக்கவில்லை. அத்தனைக்கும் காரணம் கடவுள் இல்லை. ஆனால் கடவுள் என்ற ஒருவர் இருப்பதினால் தானே என்று எண்ணிய மறுகணம், கடவுள் என் கண்களில் இருந்து மறைந்து போனார். கல்லூரி முடிந்து விட்டது. இரண்டு வருடங்கள் ஓடி விட்டன……

சில மாதங்களுக்கு முன்… திடீர் என்று ஒரு திடுக்கிடும் கனவு. என் அம்மாவுக்கு ஏதோ அசம்பாவிதம் நடப்பது போல…. நான் பொதுவாக கனவுகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் என் அம்மா என்பதாலோ என்னவோ, தூக்கம் கலைந்தது. துக்கம் பிறந்தது. என்னை அறியாமல் என் மனம் கடவுளை அழைத்தது! சிரித்தான் அவன். அழுதேன் நான். என்னை மறந்து யாசிக்கிறேன். “ஏற்பது இகழ்ச்சி!” – இகழ்ந்தவன் ஆனதால் நான் வருந்தவில்லை. இகழ்ந்தவன் ஆன பின்பே கலைந்த தூக்கம் மறுபடி வந்தது. காலை எழுந்தேன். இரவு புத்தி ௨றங்கிக் கொண்டிருந்தது போலும். காலை என்னுடன் அதுவும் ௨றக்கம் கலைத்தது. இரவு நடந்த நிகழ்ச்சி புத்திக்கு எட்டியது. என் அம்மாவுக்கு phone செய்தேன். யாவரும் நலம் என அறிந்தேன். மனம் அமைதியானது. புத்தி கேள்வி கேட்டது – “இரவு இகழ்ந்தவன் ஆனதால் தான் இன்று அமைதியாக இருக்கிறாயா?” ஆம் என்றது மனம். இல்லை என்றது புத்தி.

புத்தியா? மனமா?
கடவுள் உண்டா? இல்லையா?
இன்று வரை பதில் தெரியாமல் நான்.


முட்களே எனக்குப் பிடிக்கும்!

ரோஜாவின் இதழ்களை விட
முட்களே எனக்குப் பிடிக்கும்.
நீ கொடுத்த ரோஜாவின் இதழ்கள்
உதிர்ந்து விட்டன. ஆனால்,
முட்கள் கிழித்த அப்படியே என் கையில்.
கவலைபடாதே! காயம் ஆற நான் விட மாட்டேன்.


Copyright © 1996-2010 Arun the ACE - தமிழ் பக்கம். All rights reserved.
iDream theme by Templates Next | Powered by WordPress